ஸ்ரீவைகுண்டம்: நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்தது. இக் கோவில் ஆவணி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை 9 மணிக்கு சுவாமி நித்யபவித்தரன் எழுந்தருளினார். தினமும் காலை 11 மணிக்கு திருவிழா சிறப்பு திருமஞ்சனம், இரவு 7 மணிக்கு இந்திர விமானம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடந்தது. கடந்த 5ம் தேதி 5ம் திருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி நித்யபவித்தரன் மற்றும் அன்ன வாகனத்தில் மதுரகவி ஆழ்வார் ஆகியோரது வீதி உலா நடந்தது. நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 7 மணிக்கு திருமஞ்சனம், காலை 8.30 மணிக்கு நித்தியல் நடந்தது. காலை 9.15 சுவாமி மணிக்கு சுவாமி நித்யபவித்தரன் தேருக்கு எழுந்தருளினார். காலை 10 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை 11 மணிக்கு தேர் நிலையம் வந்தடைந்தது.