பதிவு செய்த நாள்
11
செப்
2013
11:09
ஆத்தூர்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஆத்தூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு செய்தனர். ராஜ மாதங்கி மகிளா சபா சார்பில், இரு நாட்களுக்கு முன், விநாயகர் சிலைகள் வடிமைக்கும் போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியன்று, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பல்வேறு வடிவங்களில், 108 விநாயகர் சிலைகளை, பிரதிஷ்டை செய்தனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். * ஆத்தூர் நகராட்சி, 9வது வார்டு, மாரிமுத்து ரோடு பகுதியில், 12 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் ஸ்வாமி விநாயகரை சுமந்து செல்வது போல், விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.