வீர ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2013 11:09
புதுக்கோட்டை: புதுக்கோட்டை டவுன் பிரந்தாவனம் பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் உபயதாரர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறையின் சார்பில் மூலஸ்தான கோபுரத்துடன் கூடிய திருப்பணி வேலைகள் நடைபெற்றுவந்தது. பூர்வாங்க பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்ட நேற்றுமுன்தினம்(9ம் தேதி) முதல் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வருகின்றன. தொடர்ந்து மூலஸ்தான கோபுரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. பட்டாச்சாரியார்கள் ஜெயராமன், ராஜன் ஆகியோர் சர்வசாதகம் செய்கின்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மஹா அபிஷேகம், வெண்ணை காப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.