திருப்போரூர்: காலவாக்கம் கெங்கையம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் விழா கோலாகலமாக நடந்தது. இங்கு ஆண்டுதோறும், ஆவணியில் கூழ்வார்த்தல் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, இவ்விழா கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 8ம் தேதி கரக ஊர்வலமும், கோவில் மற்றும் வீடுகள் தோறும் கூழ்வார்த்தலும் நடந்தன. இரவு அம்மன் மலர் அலங்காரத்தில் வீதி உலா வந்தார். நேற்று விளையாட்டு உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.