வருஷநாடு: விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாலிப்பாறை,வருஷநாடு,சிங்கராஜ புரம்,மேலபூசனூத்து,முருக்கோடை, தும்மக்குண்டு, கடமலைக்குண்டு, கோவில்பாறை, மயிலாடும்பாறை பகுதிகளில் விநாயக சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.