பதிவு செய்த நாள்
11
செப்
2013
11:09
தேனி: தேனி மேற்கு சந்தையில் அமைந்துள்ள அல்லிநகரம் கவுமாரியம்மன் கோயில் உற்சவ திருமேனி தங்கும் கோயில் வீட்டின் கருவறை, விமானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, தேனி கான்ட்ராக்டர் ராஜேந்திரன் இந்திரா ஆகியோர் தலைமை வகித்தனர். அறங்காவலர் குழு தலைவர் சுப்புராஜ், திருப்பணிக்குழுவினர் சின்னகாமு, ராம்பிரசாத், ஜெயபாரதி, ஜெயப்பிரகாஷ், சண்முகம், பொன்முத்து ராமலிங்கம், மாரிநாயுடு, தர்மர், ரெங்கராஜ், சிவா, தவமணி, கோவிந்தராஜ், பாலகுரு, ராமனாதன் அடங்கிய திருப்பணிக்குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் வெங்கடேசன், மகேஸ்வரி ஆனந்த், இன்ஜினியர் நந்தகுமார், தே.மு.தி.க.,நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேனி டிம்பர் பன்னீர்செல்வம், மற்றும் அழகர்சாமி, வேல்முருகன், சுப்புராம், விஜயன், நந்தகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடைபெற்றது.