பதிவு செய்த நாள்
11
செப்
2013
11:09
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்தது. திண்டுக்கல்லில், இந்து தர்ம சக்தி அமை ப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. மாநில செயலாளர் மாணிக்கம் தலை மை வகித்தார். மாநில தலைவர் நித்திய சர்வானந்தம் முன்னிலை வகித்தார். பஸ்ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், கோட்டை குளம் சென்றது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. வத்தலக்குண்டில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் பேசினார். மாநில மனித உரிமைகள் கழக செயலாளர் மின்னல்கொடி தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, பா.ஜ., மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செந்தில் நன்றி கூறினார். கண்ணாபட்டி வைகை சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது.
* நிலக்கோட்டை, விளாம்பட்டி, அம்மையநாயக்கனூர், கொடைரோடு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள், நிலக்கோட்டை கொண்டு வரப்பட்டன. இவை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் பட்டம் முன்னிலை வகித்தார். ஒட்டன்சத்திரம்: இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது. செக்போஸ்ட்டிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் திருமலை பாலாஜி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன், ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.