பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
ஊட்டி: ஊட்டி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வரும் 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள தேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், விமான ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேக விழா நாளை துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. 13ம் தேதி மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அனுக்ஞை, ஆசார்ய வர்ணம், வாஸ்து சாந்தி, மிருத்சங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், பாலிகாஸ்தாபனம், நடக்கின்றன. மாலை 6:00 மணிக்கு பெங்களூரு வாழும் கலை அமைப்பின் சார்பில் டாக்டர் அருண்மாதவனின் சத்சங்க நிகழ்ச்சி நடக்கிறது. 8:00 மணிக்கு நாகை முகுந்தன் "திருமாள் பெருமை குறித்த சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.14ம் தேதி காலை 8:00 மணி முதல் பூர்ணாகுதி,வேதபாராயணம், மாலை 4:00மணிக்கு விமான கலசஸ்தாபனம், உபசாரங்கள், திருவாராதனம் சாற்றுமுறை ஆகியவை நடக்கின்றன. மதியம் 2:00 மணிக்கு ஊட்டி பூவையர் சங்கம் வழங்கும் கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணிக்கு நாகை முகுந்தனின் "கர்ணன் குறித்த சொற்பொழிவு நடக்கிறது.15ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, உபசாரங்கள் யாத்ராதானம், கும்போத்தாபனம், காலை 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், காலை 10:00 மணிக்கு அலங்காரம் திருவாராதனம், சாற்றுமுறை, மங்கள ஆரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம் நடக்கின்றன. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை தாசப்பளஞ்சிக ராமானுஜபக்தஜன சபையினர், மாதர், இளைஞர் மற்றும் பூவையர் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.