பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
தூத்துக்குடி: தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆதீனங்கள் பங்கேற்றனர். தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஒரு கோடி ரூபாயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா செப்., 5 முதல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 7.15 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஆறாம் கால யாக பூஜைகள்,நாடி சந்தானம், பூர்ணாகுதி, தீபாரதனை நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தினர். பின் மாரியம்மனுக்கு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. விழாவில், திருவாடுதுறை ஆதீனம்,பெருங்குளம் செங்கோல் ஆதீனம்,வேளக்குறிச்சி ஆதீனம்,திருப்பனந்தாள் இணை அதிபர்,தருமபுர ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைவர் கணபதி சந்தானம்,நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசன்காத்த பெருமாள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.