பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
விழுப்புரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், வரும் 16ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா வரும் 16ம் தேதி நடக்கிறது. இதற்கான முதற்கால பூஜை இன்று (12ம் தேதி) துவங்குகிறது. காலை 6.00 மணி முதல் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், யாகசாலை பிரவேசம், சோமகும்ப ஸ்தாபனம், முதல் கால ஆராதனை நடக்கிறது.நாளை 13ம் தேதி காலை 8.00 மணிக்கு ரக்ஷõ பந்தனம், வாஸ்து ஹோமம், துவார பூஜை, வேத பிரபந்த பாராயணம், சாற்றுமுறை இரண்டாம் கால ஆராதனை மற்றும் மூன்றாம் கால ஆராதனை பூஜை, 14ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் கால ஆராதனை பூஜை நடக்கிறது.15ம் தேதி சாற்றுமுறை, ஆறாம் கால ஆராதனை , 108 கலச திருமஞ்சனம், சாந்தி ஹோமம் மற்றும் வேத பிரபந்த பாராயணம், சாற்றுமுறை மகா சயனம் நடக்கிறது.வரும் 16ம் தேதி காலை 10.10 மணி முதல் 10.30 மணிக்குள், மூலவர் விமானங்களுக்கும், ராஜகோபுரம் மற்றும் மூலவ விக்ரகங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் பெருமாள் வீதியுலா நடக்கிறது.