பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
திருவள்ளூர்: ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு, வேம்புலி அம்மனுக்கு, கோலம் கொண்ட அம்மன், தங்கை வீட்டு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவிலில், ஜாத்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான நேற்று, முகமது தெருவில் உள்ள, கோலம் கொண்ட அம்மன் கோவிலில் இருந்து, தங்கை வீட்டு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் 100 பேர், தாரை, தப்பட்டை முழங்க, அம்மனுக்கு, தேங்காய், பழம், இனிப்பு, வளையல் என, பல்வேறு பொருட்களுடன் சீர்வரிசை கொண்டு சென்று, வேம்புலி அம்மனுக்கு படையிலிட்டனர். பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது.