பைம்பொழில் முருகன் கோயிலில் தங்கத்தேர் வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2013 10:09
திருநெல்வேலி: பைம்பொழில் திருமலைக்குமாரசாமி கோயிலில் தங்கத்தேர் வெள்ளோட்டம் விழா நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பண்பொழி திருமலைக்குமாரசாமி என்றழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது. வழிபாட்டிற்காக கோயில் வரையிலும் வாகனங்கள் செல்லும் வகையில் கடந்த ஆண்டு மலைப்பாதை அமைக்கப்பட்டது. இங்கு தங்கத்தேர் அமைக்கும் பணிகள் ஒரு ஆண்டாக நடந்தது. சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடையநல்லூர் அருணாசலம் என்பவரது முயற்சிலும், உபயதாரர்கள் பங்களிப்பிலும் இந்த தேர் செய்து முடிக்கப்பட்டது. இதன் தேரோட்டம் நேற்றுமுன்தினம் இரவில் நடந்தது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி, எஸ்.பி.,விஜயேந்திர பிதரி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.,முத்துசெல்வி, அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மலைக்கோயில் அழகையும், திருத்தேர் ஓட்டத்தையும் காண தென்மாவட்டங்களில் இருந்து கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.