பதிவு செய்த நாள்
13
செப்
2013
10:09
கிழக்கு சாம்பரன்: பீகார் மாநிலம், கேத்வலியாவில், உலகிலேயே உயரமான கோவில் கட்டப்பட உள்ளது. இதற்காக, அதே ஊரைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், தன் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இந்தக் கோவிலை கட்ட, 115 ஏக்கர் நிலம் தேவை. இதுவரை, 100 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், கேத்வலியாவை சேர்ந்த, தற்போது, குண்டுவா என்ற ஊரில் வசிக்கும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த, ஜானுல் ஹக் கான் என்ற முதியவர், தன் இரண்டு ஏக்கர் நிலத்தை கோவில் கட்ட வழங்கியுள்ளார். இதற்கான பத்திர பதிவும் முடிந்துள்ளது. "கோவில் கட்டும் பணி விரைவில் துவங்கும். கோவிலின் அஸ்திவாரம் மற்றும் சிற்ப வேலைகள் அனைத்தும், பூகம்பத்தை தாங்கும் வகையில் அமைக்கப்படும் என, கோவில் கட்டுமான பணி பொறுப்பை ஏற்றுள்ளவர்களில் ஒருவர் கூறினார்.