மடத்துக்குளம்: அமராவதி ஆற்றில் கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது. உடுமலை அருகே உள்ள கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் எல்லத்துரை. இவர், தன் மனைவியுடன் நேற்று மதியம், 2:00 மணிக்கு அங்குள்ள அமராவதி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் பகுதியில் மண்ணில் புதைந்து கிடந்த,குழல் ஊதும் நிலையில் உள்ள கிருஷ்ணர் சிலையை கண்டார்.