கம்மாபுரம்: விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கம்மாபுரம் அடுத்த விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் (11ம் தேதி) காலை மகா கணபதி, நவகிரக ஹோமங்கள், மாலை விக்னேஸ்வர பூஜை, முதல் கால பூஜை, மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தன. நேற்று (12ம் தேதி) காலை 7:45 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 8:30 மணிக்கு தீபாராதனை, 8:45 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் கடம் புறப்பாடு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், சுப்ரமணியர், வள்ளி தெய்வானை, காளியம்மன் சுவாமி கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.