பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
திருவள்ளூர்:திருவள்ளூர், திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தேஸ்வரர் கோவிலில், பவித்ரோற்சவ விழா, செப் 15ம் தேதி துவங்கி, 19ம் தேதி இரவு, பூர்ணாஹாதியுடன் நிறைவடைகிறது.திருவள்ளூர் தேரடியில், திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தேஸ்வரர் கோவில், அமைந்துள்ளது. பழமை வாய்ந்த சிவாலயங்களில், இதுவும் ஒன்று. அன்றாடம் கோவிலில் செய்யப்படும், நான்கு கால பூஜையில் ஏற்படும் குறைகள், பிரம்மோற்சவ காலங்களில் ஏற்படுகிற குறைகள், பிழைகள், தோஷங்கள், இவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.பவித்ரோற்சவம், செப் 15 காலை, 8:௦0 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு பவித்ர சமர்ப்பணம், யாகபூஜை நடைபெறுகிறது. 16, 17, 18 ஆகிய நாட்களில், தினமும் காலை யாகபூஜையும், மாலை, 6:00 மணிக்கு, பவித்ர சமர்ப்பணமும், 18ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, நடராஜர் அபிஷேகமும் நடைபெறுகிறது. 19ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, பவித்ர சமர்ப்பணம். இரவு, 9:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதியுடன், விழா நிறைவடைகிறது.