கடையநல்லூர் : பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் செப் 15ம் தேதி ஈரோடு ராஜாமணி பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் தங்கத்தேர் வெள்ளோட்டம் கடந்த 11ம்தேதி நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக செப் 15ம் தேதி மாலை 3 மணிக்கு திருமலைக்கோயில் வளாகத்தில் ஈரோடு ராஜாமணி பாகவதரின் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. ஏற்பாடுகளை முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம், ராசா கன்ஸ்ட்ரக்ஷன் ரவிராஜா, மாவடிக்கால் லிங்கம் மற்றும் உபயதாரர்கள், கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.