பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
கீழக்கரை: கீழக்கரை வாணியர் உறவின் முறையார்களின் அரியசுவாமி கோயிலில் 47ம் ஆண்டு உற்சவ விழா மற்றும், சமயபுரம் மாரியம்மன் முளைக்கொட்டு திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். கீழக்கரை வாணியர் தெரு அரியசுவாமி கோயிலில் வீரமாகாளி அம்மன், முத்திருளாயி அம்மன், வலம்புரி விநாயகர், சமயபுரம் மாரியம்மனுக்கு உற்சவ விழா செப்., 6ல் காப்புக்கட்டுடன் துவங்கியது. இதையடுத்து செப் 13 காலை உதட்டான் தோப்பு நாராயணசுவாமி கோயிலில் இருந்து பால்குடம், மயில் காவடி, அக்னி காவடி, சிலாவக்காவடி சுமந்து வந்தனர். தலைமை பூஜாரி ராமதாஸ், உதவி பூஜாரி சுந்தரம் தலைமையில் சுவாமிகளுக்கு பால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. இரவில் அலங்கரித்த கரகங்களுடன், அக்னிச்சட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயில் சென்றடைந்தனர். பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சித்தி விநாயகர் கோயிலில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் வாணியச்செட்டியார் உறவின் முறை சங்கத்தினர் செய்தனர். கோயில் டிரஸ்டி சுப்பிரமணியன், விழா குழு தலைவர் ஜெகநாதன், செயலாளர் பாலகிருஷ்ணன், கமிட்டி தலைவர் ஜெயராமன், வர்த்தகர்கள் செந்தூர் செல்வன், ராஜபாண்டி, தனசேகரன், கண்ணுச்சாமி, அசோகன், போஸ், பாலமுருகன் பாண்டி, முருகேசன், விக்னேஸ்வரராஜா, ஜெயராம், மனோகர், கோட்டைச்சாமி, தர்மலிங்கம், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.