பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
திசையன்விளை :திசையன்விளை மணலிவிளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா நான்கு நாட்கள் நடந்தது. விழாவில் கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, மேஜிக் ஷோ, முத்தாரம்மன் கபடிக்குழு சார்பில் சிறுவர், சிறுமியர் நடன நிகழ்ச்சி, வில்லிசை, தீபாராதனை, தாரை தப்பட்டை, செண்டாமேளம் முழங்க அற்புத விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம், அபிஷேகம், மஞ்சள்பெட்டி ஊர்வலம், அன்னதானம், மாவிளக்கு ஊர்வலம், மாநில சிலம்பு சாம்பியன் ஐயாத்துரை ஆசான் குழுவினர் சிலம்பாட்டம், கரகம், அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, அம்மன் மஞ்சள் நீராடுதல், இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.