செய்துங்கநல்லூர் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2013 10:09
செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் துவக்கி வைத்தார். செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த 9ம் தேதி அன்று செய்துங்கநல்லூர், கருங்குளம், தெற்குகாரசேரி ஆகிய கிராமங்களில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. தினமும் பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பின்னர் சிலைகளை தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கருங்குளம், தெற்குகாரசேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த விநாயகர் சிலைகள் செய்துங்கநல்லூர் சிவன் கோயிலுக்கு வந்தது. அங்கிருந்து இந்து முன்னணியினர் ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். கருங்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் இசக்கி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து பேசினார். இந்த ஊர்வலம் செய்துஙகநல்லூரில் முக்கிய வீதிகள் வழியாக வந்து திருச்செந்தூர் மெயின் ரோட்டை அடைந்தது. அங்கிருந்து அருகில் உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.