பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
ஆழ்வார்குறிச்சி :ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் செப் 14ம் தேதி கருடசேவை நடக்கிறது. ஆழ்வார்குறிச்சியில் கீழகிராமத்தில் வேங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு செப் 14ம் தேதி கருடசேவை நடக்கிறது. கட்டளைதாரர் முத்தையாஐயர் குடும்பத்தினர் சார்பில் செப் 14, நடக்கும் கருடசேவை விழாவில் காலையில் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், மாலையில் சகஸ்ரநாம அர்ச்சனை, சாயரட்சை தீபாராதனை, இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகள் வருகிறது. முதலாம் சனிக்கிழமையான வரும் 21ம்தேதி மும்பை கிருஷ்ணன் சார்பில் முதலாம் கருடசேவையும், வரும் 28ம்தேதி ரவணசமுத்திரம் ராமசுப்பிரமணியன் குடும்பத்தினர் சார்பில் 2ம் கருடசேவையும், அக்.5ம்தேதி சேர்வலார் சங்கரி டீச்சர் குடும்பத்தினர் சார்பில் 3ம் கருடசேவையும், அக்.12ம்தேதி 4ம் கடைசி சனிக்கிழமை அன்று வெங்கடகிருஷ்ணன் குடும்பத்தினர் சார்பில் கருட சேவை நடக்கிறது. அதனை தொடர்ந்து அக்.13ம்தேதி ரவணசமுத்திரம் கல்யாணசுந்தரம் குடும்பத்தினர் சார்பிலும், அக்.19ம்தேதி ஆழ்வார்குறிச்சி செந்தில்பட்டர் குடும்பத்தினர் சார்பிலும் கருடசேவை நடக்கிறது. இக்கோயிலில் மொத்தம் 7 கருடசேவை விழா நடக்கிறது.