பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
நெகமம் அருகேயுள்ள கப்பினிபாளையம் விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன், ஐயப்பன், பூமித நீளா சமேத கல்யாண ஹரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று(16ம் தேதி) நடக்கிறது. இன்று அதிகாலை 4.00 மணியளவில் நான்காம் கால யாக வேள்வி பூஜை நடக்கிறது. காலை 5.00 மணி முதல் 6.15 மணிக்குள் கும்பாபிஷேகத்தை பெரியகளந்தை, சுந்தரகணேச சிவாச்சார்யரும், கப்பினிபாளையம் பெருமாள் கோவில் ராமானுஜ கிருஷ்ண ஸ்வாமிகளும் நடத்துகின்றனர். கப்பினிபாளையம் விநாயகர், மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடக்கிறது. மடத்துக்குளம், வேடபட்டி காளியம்மன் கோவில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமானபணிகள் கடந்த ஆண்டு தொடங்கி சென்ற மாதம் நிறைவடைந்தது. இன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மெட்ராத்தி ஊராட்சி தாசர்பட்டி மாரியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். விஸ்வகர்ம ஜெயந்தி பூஜை உடுமலையில் நான்காம் ஆண்டு விஸ்வகர்ம ஜெயந்தி பூஜை விழா லயன்ஸ் திருமண மண்டபத்தில் நாளை (17ம் தேதி) நடைபெறுகிறது. விழாவையொட்டி, காலை 8:00 மணி முதல் பிற்பகல் 11:00 மணி வரை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், திரவியாஹுகுதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், மாலை 5:30 மணி முதல் 9:00 மணி வரை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகாவாசனம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், விஸ்வகர்மா ஜெயந்தி, மகா அபிஷேகம், மகாதீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது.