பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சிவன் கோவில் மற்றும் நரசிம்மர் கோவிலில் நாளை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடக்கிறது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் சுற்றுப்புற கோவில்களில் சிவன் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நாளை நடக்கிறது. இதைத்தொடர்ந்து இன்று விஷ்வக்சேனர் ஆராதன நிகழ்ச்சியுடன் பூஜை துவங்குகிறது. மாலை 4.00 மணிக்கு தேன், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், பால், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. அலங்கார நெய்வேத்திய பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. சிவனுக்கு சிறப்பு ஆடைகளில் அலங்காரங்கள் செய்யப்படுகிறது. பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கலாம் என கோவில்களின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.