பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
உளுந்தை:உளுந்தை கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், இன்று, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மப்பேடு ஊராட்சிக்கு அடுத்துள்ளது, உளுந்தை கிராமம். இந்த கிராமம், பூந்தமல்லி பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு, கதிர்வேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே, 41 அடி உயரத்தில், ராம, லட்சுமணரை, தன் தோளில் சுமந்தபடி நின்ற நிலையில், ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு, மகா கும்பாபிஷேகம், இன்று காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.