வேதாரண்யம்: குளுந்தாலம்மன் கோவிலில் தேரோட்ட விழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை வழிபட்டனர் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியில், குளுந்தாலம்மன் மற்றும் முனீஸ்வர கோவில் உள்ளது. இங்கு, 56வது ஆண்டு விழாவையொட்டி தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் இறைவழிபாடு நடத்தப்பட்டது. மாலை, 4 மணிக்கு, குளுந்தாலம்மன் தேரில் எழுந்தருளி, தேரோட்ட விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி, அக்னி கப்பரையுடன் செல்லும் அம்மன் வீதியுலா காட்சி ஆகியவை நடந்தது.