வேதாரண்யம்: பழையங்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. வேதாரண்யம் அடுத்த தென்னம்புலம் தலைநகரிலுள்ள, பழையங்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடந்தது. இதையொட்டி முன்னதாக, யாகசாலை பூஜைக்கு பின்னர், காலை, 10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 11 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி, சிறப்பு பூஜைகளை நடத்தினர். பின் மூலஸ்தான விக்கிரஹங்களுக்கு மஹாகும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.