வேடசந்தூர்:வேடசந்தூர் அருகில் உள்ள ரங்கநாதபுரத்தில் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், காளியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள இசை, புண்யயாகம், கணபதி பூஜை, சகஸ்ரநாமம் உட்பட பல பூஜைகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்தை அடுத்துஅன்னதானம் நடந்தது. சிவகுமார் சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.