ராதானூர் அருகே நெட்டேந்தல், முடிக்கினார் கோட்டை பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 10.45 மணிக்கும்,தர்மமுனீஸ்வரர் கோயிலில் காலை 11 மணிக்கும்,முத்துமாரியம்மனுக்கு காலை 11.45மணிக்கும் சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றினர். ஆனந்தூர், ராதானூர், சாத்தனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தரிசித்தனர். ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகம், இளைஞர்மன்றத்தினர் செய்திருந்தனர்.