பதிவு செய்த நாள்
16
செப்
2013
11:09
திருநெல்வேலி : நெல்லை டவுன் லெட்சுமி நரசிம்மர் கோயிலில் லெட்சுமி-வெங்கடாஜலபதி கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. லெட்சுமி கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு அஷ்டபதி பஜனை, திவ்யநாம பஜனை, முத்து குத்தல் வைபவம், தைலக் காப்பு, மாலை மாற்றுதல், மாங்கல்ய தாரணம் வைபவம், நலுக்கு, பூப்பந்து உருட்டுதல், தெலுங்கு கீர்த்தனைகள் பாடுதல் வைபவம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. கல்யாணத்தை சேரன்மகாதேவி வைத்தியாநாத பாகவதர் குழுவினர் நடத்தினர். ஏற்பாடுகளை சங்கரன், வெங்கடாச்சலம், வெங்கடேஷ், சுந்தரி, குமார், ராமசுப்பிரமணியன், கணபதி செட்டியார் மற்றும் கிருஷ்ணன் கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.