பதிவு செய்த நாள்
16
செப்
2013
11:09
நான்குநேரி : நான்குநேரி கல்வி விநாயகர், முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன் கோயில்களில் இன்று (16ம் தேதி) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. நான்குநேரி விஸ்வகர்ம சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கல்வி விநாயகர், முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன் கோயில்களின் கும்பாபிஷேக விழா நேற்று 15ம் தேதி துவங்கியது. முதல் நாள் மாலை 4.30 மணிக்கு மங்கள வாத்தியம், 5 மணிக்கு தீர்த்த சங்கீரஹனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, எஜமான சங்கல்பம், மகாகணபதி அனுக்ஞை, புன்யவாசகம், விநாயகா கலாகர்ஷனம், இரவு 8 மணிக்கு யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல், இரவு 10.30 மணிக்கு அம்பாள் யாகசாலை பூஜை, ப்ரத்யங்கரா யாகம், பூர்ணாகுதி ஆகியன நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று (16ம் தேதி) காலை 3.30க்கு மங்கள வாத்தியம், 4 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, வேதபாராயணம், காலை 5.30 மணிக்கு கல்வி விநாயகருக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடக்கிறது.மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.