புதுச்சேரி:ஞானபிரகாசம் நகர் ஞான விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. சாரம் அரசு வாகன பணிமனையின் பின்புறம் உள்ள ஞானபிரகாசம் நகர் ஞான விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 13ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை நவக்கிரக ஹோமம், கஜபூஜை, கோபூஜை, தன பூஜைகள் நடந்தது. மாலை யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு விசேஷ சந்தி யாகசாலை, இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:00 மணிக்கு தீபாராதனையும் அதைத்தொடர்ந்து பரிவார விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேமும், 10:00 மணிக்கு மூலவர் ஞான விநாயகருக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் வைத்தியலிங்கம், ஞான பிரகாசம் நகர் தலைவர் வேளாங்கண்ணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.