திருக்கழுக்குன்றம்:எடையூர் செல்லியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. இக்கோவிலில், நன்கொடையாளர் நிதியின் மூலம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு, கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் தெளித்து, கும்பாபிஷேகம் செய்தனர். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.