பதிவு செய்த நாள்
18
செப்
2013
10:09
கடையநல்லூர் : திருமலைக்குமார சுவாமி கோயில் மலைப்பாதை மற்றும் தங்கத் தேர் அமைத்த உபயதாரர்கள் அளித்த பணிகளுக்காக பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு புளியங்குடி எஸ்.வி., கல்லூரி சேர்மன் முருகையா தலைமை வகித்தார். இசக்கிலால்சிங், வண்டிமுத்து, கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹரிணி சுப்பிரமணியன் என்ற குட்டி வரவேற்றார். விழாவில் திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு மலைப்பாதை அமைத்தும், தங்கத்தேர் உருவாக்கிட உபயதாரர் பணிகளை மேற்கொண்ட முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், அவரது துணைவியார் பரமேஸ்வரி அருணாசலம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ராசா கன்ஸ்ட்ரக்ஷன் மேலாளர் ரவிச்சந்திரராஜாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் சிவசைலா நடுநிலைப்பள்ளி நிர்வாகி கணேஷ்ராம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரவீந்திரன் ராஜா, முருகேசன், சீனிவாசன், விவேக், மனோகரன், சத்தியராஜ், பாலா மற்றும் ஹரிணி வித்யாலயா பள்ளி பிரைட்ஸ்டார் கண்தான, ரத்த தான கழகத்தினர் செய்திருந்தனர்.