மதுரை மீனாட்சி அம்மன் மீனாட்சி கோயிலில் 5 ஸ்கேனர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2013 10:09
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளது. இதனால், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, 5 கோபுரங்களிலும், பக்தர்களின் பொருட்களை ஸ்கேன் செய்யும் கருவிகளை அமைக்க போலீசார் பரிந்துரைத்தனர். இதைஏற்று, கோயில் நிர்வாகம் ரூ.86 லட்சத்தில், 5 ஸ்கேனர்களை வாங்கியுள்ளது. பொருட்கள் வைப்பறையில் இவை வைக்கப்படவுள்ளன. பெரிய பொருட்கள் என்றால், ஸ்கேன் செய்து அந்த அறையிலேயே பாதுகாக்கப்படும். சிறிய பொருட்கள் என்றால், பாலிதீன் கவரால் மூடப்பட்டு, போலீசாரால் "லாக் செய்யப்படும். ஒருவாரத்தில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது.