Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தலைமுறைக்கே லாபம் அளிக்கும் மகாளய பட்சம்! தலைமுறைக்கே லாபம் அளிக்கும் மகாளய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலுக்கு சொந்தமான வசந்த மண்டபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2013
10:09

 ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலுக்கு சொந்தமான வசந்த மண்டபத்தை சீர்படுத்தி தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில் மேற்கு நோக்கியுள்ள பிரசித்திபெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயிலில் பலர் தங்கள் திருமணங்களை நடத்துவர். கோயிலுக்கு எதிரே கோயிலின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வசந்த மண்டபம் உள்ளது. கோயில் திருமணம் நடத்துபவர்கள் இந்த மண்டபத்தில் தான் வரவேற்பு விழா நடத்துவதுடன் சாப்பாடு உட்பட பல விசேஷலங்களை நடத்துவர். கோயில் வளாகத்திற்கு உள்ளேயே கோயிலின் எதிரே பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம் 1905ம் வருடம் கட்டப்பட்டது. சுமார் 108 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கட்டடம் பழுது பார்க்காத நிலையில் சமைத்த உணவுகளை வைக்கும் இடத்தில் மேலே காரை பெயர்ந்து விழுந்துள்ளது. மண்டபத்தின் நடுவிலேயும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தபோது சமையறையில் மேற்கூரையில் உள்ள காரை மேலும் பெயர்ந்து விழுந்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். நாள் ஒன்றிற்கு 1500 ரூபாய் வாடகை வசூலிக்கும் கோயில் நிர்வாகம் மண்டபத்தை சீரமைக்காமல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் மண்டபம் உள்ளது. மேற்கூரையை மாற்றி அமைத்து மண்டபத்தை சீரமைத்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar