வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த காரணீஸ்வரர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 04:04
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று காலை பல்லக்கு உத்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் மஹா அபிஷேகம் நடந்தது. நள்ளிரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் பிரதான நாளான நாளை தேர் திருவிழா நடக்கிறது. அன்றைய தினம் காலை 7:00 மணி முதல் 7:30 மணிக்குள் பக்தர்களால் தேர்வடம் பிடிக்கப்படுகிறது.