Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கரையில் ... கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் 23 சவரன் சுவாமி நகை திருட்டு கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் 23 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்: யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்: யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
05:04

பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.


கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது. இன்று காலை 8:00 மணிக்கு நெய்தலைக்காவு பகவதி அம்மன் உருவச் சிலை குற்றூரில் இருந்து, ஆடை, ஆபரணங்கள் அணிந்த எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது, வடக்குநாதர் சன்னிதி நோக்கி புறப்பட்டார். செண்டை மேளத்துடன், வழித்தடத்தில் இருபுறமும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க திரண்டு வந்திருந்தனர். மதியம் 12:45 மணிக்கு மணிகண்டனால் பகுதியை வந்தடைந்த அம்மன், கணபதி கோவில் அருகே நின்றதும், செண்டை மேளம் முழங்கத் தொடங்கியது. அதே மேளதாளத்துடன் மணிகண்டனால் பகுதியிலிருந்து, அம்மன் வடக்குநாதரின் ஸ்ரீமூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 01:30 மணிக்கு பகவதி அம்மன் வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து, தெற்கு கோபுர நடவழியாக வெளியேறிய யானை, துதிக்கையை உயர்த்தி மூன்று நாள் பூரம் திருவிழாவை அறிவித்தது. 


நாளை 26ம் தேதி காலை இதே கோபுர நடை வாயிலாக, உற்சவர் கணிமங்கலம் சாஸ்தா யானை மீது எழுந்தருளுவதுடன் தூரத்தில் முக்கிய நாளின் நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாகும். திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும், குடை மாற்றம் நிகழ்வும், இன்று மாலை நடக்கிறது. முன்னதாக, விழாவை முன்னிட்டு பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டி போட்டு நடத்தும் யானைகளின் ஆடை, ஆபரண அலங்கார பொருட்களின் கண்காட்சியான "யானைச்சமயம்" நேற்று துவங்கியது. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar