Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி கோவிலில் சிறிய லட்டு ... திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயூரநாதர் கோவில் தங்க கலசம் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 செப்
2013
11:09

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோவில் உள்ளது. தேவார பாட ல் பெற்ற இந்த தலத்தில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி அடைந்துள்ளார். அபயாம்பிகை அம்பாள் சன்னதி விமானத்தில் 3 அடி உயரமுள்ள செப்பு கல சத்திற்கு 1991 ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது 200 கிராம் எடையு ள்ள தங்க முலாம் பூசப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவிலில் உ ள்ள சன்னதிகளின் நடையை சாத்திவிட்டு பணியாளர்கள் சென்றுள்ளனர். இ ரவு காவலுக்கு 2 காவலர்கள் மட்டும் கோவிலில் இருந்துள்ளனர். நேற்று காலை 6 மணிக்கு கோவிலின் நடையை திறந்த அதிகாரிகள் உள்ளே செள்று சுவாமி தரிசனம் செய்து விட்டு கோவிலை வலம் வந்த போது அபயாம்பிகை விமானத்தில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை மர்ம நபர்க ள் உடைத்து திருடி சென்றுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆனையர் சாமிநாதன், திருவாவடுதுறை ஆதின கட்டளை தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் நாகையிலிருந்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழை க்கப்பட்டு சோதணை செய்யப்பட்டதுடன்,  திருடர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அபயாம்பிகை அம்பாள் சன்னதி விமானத்தில் இருந்து கலசம் திருட்டு போ னது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும், இனிஎன்ன நடக்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar