Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயூரநாதர் கோவில் தங்க கலசம் ... குளத்துக்கு இடம்பெயரும் கோவில் அரச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா: அக்.,2ல் குமரியில் இருந்து சுவாமி பவனி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2013
11:09

நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவுக்காக சுவாமி விக்ரகபவனி அக்., இரண்டாம் தேதி கன்னியாகுமாரி மாவட்டம் பத்மனாபபுரத்திலிருந்து புறப்படுகிறது. பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் சரஸ்வதிதேவி கோயில் உள்ளது. இங்குள்ள சிலை கவியரசர் கம்பர் வழிபட்டது என்று வரலாறு கூறுகிறது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக பத்மனாபபுரம் விளங்கிய போது இங்கு மன்னரின் நேரடி
மேற்பார்வையில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. நாளடைவில் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றிய பின்னரும் நவராத்திரி விழாவை மன்னர் நேரடியாக நடத்த வசதியாக யானை மீது சரஸ்வதி தேவி சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் பழமை மாறாமல், இருமாநிலங்களின் உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த நவராத்திரி பவனி நடைபெறுகிறது. கேரள போலீசார் பத்மனாபபுரம் வந்து அணி வகுப்பு மரியாதை நடத்தி கேரளாவுக்கு சுவாமி சிலைகளை கொண்டு செல்கின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் இரண்டாம் தேதி காலையில் சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பவனியாக புறப்படும். இந்த பவனியில் மன்னர் பயன்படுத்திய உடைவாள் எடுத்து செல்லப்படும். இதை எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar