Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி அருகே முதுமக்கள் தாழி ... மழை பொழிய கஞ்சி கலய ஊர்வலம்! மழை பொழிய கஞ்சி கலய ஊர்வலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 செப்
2013
10:09

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமை பூஜை நேற்று நடந்தது. காலை 5.00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பெருமாள் கருட சேவை நடந்தது. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். தாசர்களுக்கு, அரிசி, பருப்பு, காய்கறி படையல் செய்தனர். தாசர்கள் பெருமாளுக்கு சங்கு நாதம் செய்தனர். அதிகாலை முதலே, கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை முதல், மாலை வரை, கூட்டம் குறையாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.பொங்கலூர்: கோவில்பாளையம் ராமசாமி கோவிலிலும் நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள், ராமசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டால், பெருமாளை நேரில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் மொட்டையடித்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

அவிநாசி: தாளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், அதிகாலை 5.00 மணிக்கு பெருமாளுக்கு பால் அபிஷேகம், திருமஞ்சனம், 12.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திருப்பூர், அவிநாசி, அன்னூர், புளியம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், அதிகாலை 3.00 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 7.00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் பண்டரி பஜனை குழுவினர் சார்பில், கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar