ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு கருடசேவை நடந்தது.காலையில் கட்டளைதாரர் மும்பை கிருஷ்ணன் குடும்பத்தினர் முன்னிலையில் கும்பஜெபம், வேதபாராயணம், விசேஷ அபிஷேகம், தீபாராதனை ஆகிய வைபவங்களை ரெங்கநாத ஐயங்கார், சம்பத்குமார் ஆகியோர் நடத்தினர். மாலையில் சகஸ்கரநாம அர்ச்சனை அதனை தொடர்ந்து சாயரட்சை தீபாராதனை இரவு பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா, தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.