பதிவு செய்த நாள்
24
செப்
2013
11:09
மெஞ்ஞானபுரம்: மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள செம்மறிக்குளம் கஸ்பா முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடக்கிறது. மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள செம்மறிகுளம் கஸ்பா முத்தாரம்மன் கோயில் வருடாந்திர கொடைவிழா 22ம் தேதி மாலை துவங்கியது. நேற்று (23ம் தேதி) காலை தேவாரம், பால்குடம் எடுத்தல்,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும். மாலை 108 திருவிளக்கு பூஜையும். நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், அம்மன் வீதி உலா வந்து, மாவிளக்கு பெட்டி,ஆயிரம் கண் பானை, முளைப்பாரி எடுத்தலும், இன்று (24ம் தேதி) காலை தேவாரமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், அம்மன் மஞ்சள் நீராடுதல், மாலை அம்மன் வீதி உலாவருதல், இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், நள்ளிரவு அலங்கார தீபாராதனையும், அம்மன் சப்பரத்தில் யானையுடன் பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகளுடன் கொடை விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செம்மறிக்குளம் கஸ்பா கோவில் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.