விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரம் அருகே அய்யனார் குளத்தில் பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி கோயிலில் கால் நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. கொடை நாளான கடந்த 17ம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் மதியம் 1 மணிக்கு பூர்சு அடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணி அளவில் சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்தனர்.