மாரியம்மாள்புரம் புனித லூர்துஅன்னை ஆலய திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2013 11:09
உடன்குடி: உடன்குடி மரியம்மாள்புரம் புனித லூர்துஅன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலை 6.30க்கு செப மாலையும், தொடர்ந்து திருப்பலியும், பின்பு நற்செய்தி பெருவிழாவும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வரும் 28ம் தேதி காலை 7 மணிக்கு ஜெபமாலை திருப்பணி தொடர்ந்து ஞானஸ்தான ஆராதனையும், மாலை 7 மணிக்கு பெருவிழாவும் தொடர்ந்து மாலை ஆராதனையும் அடைக்கலாபுரம் கிருபாகரன் நற்செய்தியும் தொடர்ந்து ஐக்கிய விருந்து, இரவு 10 மணிக்கு தேவதாயின் சொரூபம் அலங்கரிக்கபட்ட சப்பர பவனி நடக்கிறது. வரும் 29ம் தேதி அதிகாலை தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைகுரு செல்வராஜ் தலைமையில் பெருவிழா பாடற்திருப்பலி புதுநன்மை விழா மற்றும் திருப்பலி நற்செய்தி ஆகியன நடக்கிறது. காலை 8 மணிக்கு ஐக்கிய விருந்து, தொடர்ந்து கொடியிறக்க திருப்பலி மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டி, இரவு 9 மணிக்கு சிறுவர் சிறுமியர்கள் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 30ம் தேதி மாலை 4 மணிக்கு ஆயிரக்கணக்காண மக்களுக்கு அசன உணவு வழங்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரோசின் மற்றும் பங்கு நிர்வாகிகள் பங்கு இறைமக்கள் செய்துவருகின்றனர்.