பதிவு செய்த நாள்
25
செப்
2013
10:09
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் வாடகை வசூல், 52 லட்சம் ரூபாயை தாண்டியது. அந்த கோவிலின் நிர்வாகம், வாடகை வசூலிக்கும் முறையை, மற்ற கோவில் நிர்வாகங்களும் பின்பற்றினால், கோவில்களுக்கு சேர வேண்டிய, பல கோடி ரூபாய், வந்து சேரும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில்,குத்தகைக்கு எடுத்தோர், ஆண்டுக்கணக்கில் வாடகை செலுத்தாமல்,அரசை ஏமாற்றி வந்தனர்.இதுகுறித்து, ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது.அதைத் தொடர்ந்து, வாடகை பாக்கி வைத்திருக்கும் வீடுகளில், அறநிலைய துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். வாடகை செலுத்துவதற்கான இறுதிக் கெடு விதித்தனர். இந்த நிலையில், தற்போது, 52 லட்சம் ரூபாய், வாடகை வசூலாகி உள்ளது.