பேரூர்:மருதமலை சுப்ரமணியசாமி கோவிலில் உள்ள 14 உண்டியல் அறநிலையத்துறை உதவி கமிஷனர் நடராஜன்(பொறுப்பு), உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. பொதுஉண்டியலில் ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 452 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 901 ரூபாயும், திருப்பணி உண்டியலில் ரூ. 34 ஆயிரத்து 533 ரூபாயும் வசூலாகியிருந்தது. மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 61 கிராம் தங்கமும், 292 கிராம் வெள்ளியும் உண்டியல் எண்ணும்போது இருந்தது. பேரூர் கோவில் அன்னதான உண்டியல்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அன்னதான கோவில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த ரூ. 61 ஆயிரத்து 6 ரூபாய் வசூலாகியிருந்தது.