சாயல்குடி: சாயல்குடி அருகே கிருஷ்ணாபுரத்தில் உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயிலில், முளைப்பாரி திருவிழா நடந்தது. காலை, மாலை அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்தது. பின் முளைப்பாரி ஊர்வலம் முக்கியதெருக்களின் வழியாக சென்று ஊரணியில் கரைக்கப்பட்டது. இரவில் நடந்த கபடி போட்டியில் ஆப்பனூர், கிருஷ்ணாபுரம், உஜ்ஜைனி மாகாளியம்மன் செவன் ஆகிய அணிகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றன. கிராம தலைவர் முனியசாமி, செயலாளர் வீரபாண்டி, பொருளாளர் முத்துமுருகன் ஆகியோர் பரிசு வழங்கினர்.