மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில், கன்னிகா பரமேஸ்வரி அசோசியேட்ஸ் சார்பில், 108 திவ்ய தேசபெருமாளின் தரிசன கண்காட்சி செப்.,29 வரை நடக்கிறது. அனைத்து இடங்களுக்கும் சென்று, ரங்கநாதர் முதல் திருவேங்கடமுடையான் உட்பட வைகுண்டநாதர் வரை யிலான 108 திவ்ய தேசபெருமாளை தரிசிக்க முடியாதவர்களுக்கு இது அரிய வாய்ப்பு. மூலவர், எந்த அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாரோ, அதை அப்படியே தத்ரூபமாக இங்கே வடிவமைத்து இருக்கின்றனர். தினமும் காலை 5.30 மணிக்கு, சுப்ரபாத தரிசனத்துடன் கண்காட்சி துவங்குகிறது. இந்நிகழ்ச்சிக்கு "பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி.