பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
சேலம்: ஓமலூர் அடுத்த கச்சுவள்ளியானூர் சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், புதிய உற்சவமூர்த்திக்கு, மஹா சம்ப்ரோஷண திருக்கல்யாணம் நாளை நடக்கிறது.
திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட உற்சவமூர்த்திக்கு, காலை, 6 மணியளவில் விஷ்ணுசேன ஆராதனை, மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹீதி செய்து, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9.30 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், புதிய உற்சவமூர்த்திக்கு மஹா சம்ப்ரோஷணம் நடக்கிறது. காலை, 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையும் நடக்கிறது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.