பதிவு செய்த நாள்
28
செப்
2013
10:09
காரிமங்கலம்: காரிமங்கலம் லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில், புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு பூஜை இன்று (செப்., 28) நடக்கிறது.
காரிமங்கலம் கடைவீதி அக்ரஹாரம் ஸ்ரீ லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில் புரட்டாசி மாத இரண்டாம் சனிகிழமையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், கோவில் குருக்கள் பிரகாஷ், மோகன்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.
* காரிமங்கலம் அடுத்த கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், பிக்கனஹள்ளி சென்றாய ஸ்வாமி மலைக்கோவில், தேவர்முக்குளம் ரங்கநாதர் ஸ்வாமி கோவில் ஆகியவற்றில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* தர்மபுரி கோட்டை பரவாசுதேவர் கோவில், கடைவீதி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், கெரகோடஅள்ளி ஸ்ரீ வீரதீர விவேக ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளிக்கவசம் சாத்துதல் ஆகியவை நடக்கிறது.